இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் மூன்று  போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 துவங்கியது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் இந்தியா 19/0 என இருந்தது. தவான் 3 ரன்களுடனும், ராகுல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் பின்னர் இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 273 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ரன்கள் எண்ணிக்கை மூலம் இந்தியா இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் எம்.எம்.அலி ஐந்து விக்கெட்டுகளை பறித்தார்.


இதனைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் நிலை தடுமாறினர். அணித்தலைவர் ரூட் 48(88), பட்லர் 69(122) நிதானமான விளையாட்டினை வெளிப்படுத்தி அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து குறைய 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 260 குவித்தது.


இரண்டு விக்கெட்டுகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு நான்காம் நாள் ஆட்டத்தினை துவங்கிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இதனையடுத்து 2445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்தது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழக்க தடுமாற்றத்தின் உச்சிக்கு சென்றது இந்தியா. 


இதற்கிடையில் கோலியும், ரகானேவும அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அணியின் எண்ணிக்கை 123-ஆக இருக்க, கோலி 58(130) ரன்களுக்கு வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற இந்தியா 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது!