கனவை நினைவாக்கிய இங்கிலாந்து! டி20 உலககோப்பையை வென்று சாதனை!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 12 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்தியாவை அரைஇறுதியில் அதிரடியாக வீழ்த்தி பைனலுக்கு நுழைந்த இங்கிலாந்து அபாரமாக விளையாடி கோப்பையை வென்றுள்ளது. பரபரப்பான இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
மேலும் படிக்க | டிராவிட், ரோஹித் வேண்டாம்! இவர்கள் தான் பெஸ்ட் - ஹர்பஜன் சிங்!
ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி பவுலிங்கில் மிரட்டியது. பவர்ப்பிலேயில் ரன்கள் வராமல் கட்டுப்படுத்தியது. ரிஸ்வான் 15 ரன்களில் வெளியேற பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மசூத் மற்றும் ஷதாப் கான் தவிர இரட்டை இழக்க ரன்களை கூட மற்ற வீரர்கள் அடிக்கவில்லை. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 1387 ரன்கள் மட்டுமே அடித்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்களையும், அடில் ரஷித் மற்றும் ஜார்டன் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
எளிதாக இலக்கை எதிர்த்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பவுலர்கள் வேகத்தில் மிரட்டினர். முதல் ஓவரிலேயே அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜோஸ் பட்லரும் 26 ரன்களில் ஆட்டமிழக்க பைனல் போட்டியில் பரபரப்பு நிலவியது. கடைசியில் ஸ்டோக்ஸ் மற்றும் மெயின் அலியின் அதிரடியில் இங்கிலாந்து அணி 19 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ