முதல் நாள் ஆட்டத்தின் 50 ஓவர் வரை இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவை பழிதீர்த்துக் கொண்டது. இதனையடுத்து டெஸ்ட் தொடர் இன்று முதல் துவங்குகிறது.


பிரிமிக்ஹான் மைதானத்தில் நடைப்பெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து வருகிறது. ஆட்டத்தின் முதல் நாளான இன்று மதிய உணவு நேர இடைவெலை வரை இங்கிலாந்து 28 ஓவர்கள் விளையாடி 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் குவித்துள்ளது. அதிரடி நாயகன் கூக் 13(28) ரன்களில் வெளியேறினார். 



 


மதிய உணவு நேர இடைவேலைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 98 ரன்னுக்கு இரண்டாவது விக்கெட்டையும், 112 ரன்னுக்கு மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது. ஜின்னிங்ஸ் 42(98) ரன்னுக்கும், தாவித் மலன் 8(14) ரன்னுக்கும் அவுட் ஆகினர். இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும், ஷமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.


பின்னர் ஜோ ரூட் 80(156) ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். ஜானி பேர்ஸ்டோவ்69(86) பென் ஸ்டோக்ஸ்1(8) ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.