இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 : போட்டியை நிறுத்திய ஈசல்கள், நூலிழையில் வென்ற இந்தியா
India vs South Africa | இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டி20 போட்டி ஒரு சில நிமிடங்கள் பாதியில் நிறுத்தப்பட்டது. ஏன் தெரியுமா?
India South Africa cricket highlights Tamil | இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி சில நிமிடங்கள் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாதியில் ஈசல்கள் மைதானத்துக்குள் நுழைந்து, மின் விளக்குகளை சுற்றி வட்டமடித்தது. வீரர்கள் மீதும் பூச்சிகள் விழுந்ததால் இந்தியா - தென்னாப்பிரிக்கா வீரர்கள் மைதானத்தை விட்டே வெளியேறினர். சில நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னர் போட்டி தொடர்ந்தது. அப்போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.
ஓப்பனிங் இறங்கிய சஞ்சு சாம்சன் இப்போட்டியில் டக்அவுட்டாகி வெளியேறினார். மார்கோ யான்சன் வீசிய பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த திலக் வர்மா, மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரின் அதிரடி பேட்டிங்கில் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 5 சிக்சர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். மற்றொரு முனையில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா தன்னுடைய முதல் டி20 சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக ஆடிய அவர் 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கேப்டன் சூர்யகுமார் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 18 ரன்களும், ரமன்தீப் சிங் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதிகபட்சமாக கிளாசன் 41 ரன்களும், அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த யான்சென் 54 ரன்களும் எடுத்தனர். இத்தனைக்கும் வெறும் 17 பந்துகளில் அரை சதமடித்து இந்திய அணியை மிரட்டினார் யான்சென். நல்லவேளையாக அவரது விக்கெட்டை எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இப்போட்டியில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ