பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் அணியை ஆதரித்து, 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவதற்கு என்ன தேவை என்று அவர் அறிவுரையும் வழங்கியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோதலுக்கான நாளை ஐசிசி மாற்றியமைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 14 அன்று போட்டி நடைபெறும் என்று அறிவித்த பிறகு மீண்டும் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.


பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அகீப் ஜாவேத் சமீபத்தில், இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு என்ன தேவை என்பதைப் பற்றி பேசினார். இந்திய அணியினரின் உடல்தகுதி சரியாக இல்லாததால், இந்தியா வெற்றிப் பெறுவதற்காக போராடும் என்றும் அவர் கூறினார்.


"பாகிஸ்தான் அணி சமநிலையில் உள்ளது மற்றும் வீரர்களின் வயது தொடர்பான விவரங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். அதுவே, பெரிய பெயர்களை அணியில் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினரின் உடற்தகுதி மற்றும் வடிவம் ஃபார்மில் இல்லை. வெற்றிபெற அவர்கள் போராடுவார்கள் மற்றும் சரியான ஒரு கலவையை உருவாக்க புதிய வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன், ”என்று அக்கீப் ஜாவேத் தெரிவித்தார்.  


மேலும் படிக்க | ஆசியக் கோப்பை போட்டிகளில் அதிரடியாய் பந்து வீசி சாதித்த இந்திய பவுலர்கள்


ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று (2023, ஆகஸ்ட் 9 புதன்கிழமை) அறிவித்தது. ஷான் மசூத், இஹ்சானுல்லா, இமாத் வாசிம் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.


ஆசிய கோப்பை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர் தயாப் தாஹிர் ஆகியோர் புதன்கிழமை சேர்க்கப்பட்டனர்.


50 ஓவர் ஆசியக் கோப்பை 2023 இன் குரூப் கட்டத்தில் இந்தியா செப்டம்பர் 2 ஆம் தேதி கண்டி பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினால், கொழும்பில் அந்த மோதல் நடைபெறும்.


ஆப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் ஒருநாள் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், முகமது ரிஸ்வான் (Wk), ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், சவுத் ஷகீல், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி, தயப் தாஹிர், முகமது ஹாரிஸ் (wk), ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம்


மேலும் படிக்க | 2023ல் அதிக தனிநபர் ஒருநாள் ஸ்கோரைப் பெற்ற டாப் 10 பேட்டர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ