அவரும் இல்ல, இவரும் இல்ல; கேப்டன்ஸியை அடிச்சுத் தூக்கிய டு பிளசிஸ்!
ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டு பிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லின் முக்கிய அணிகளுள் ஒன்று- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அவ்வணிக்குக் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி கடந்த சீசனுடன் தனது கேப்டன் பொறுப்பைத் துறந்தார். அதே நேரம் பேட்ஸ்மேனாக வழக்கம் போல அவ்வணிக்காக விளையாடுவேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் முதல் தொடரிலிருந்து தற்போது வரை அணி மாறாத வீரராக விராட் கோலி உள்ளார். இதனிடையே அவ்வணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக இருந்துவந்த டி வில்லியர்ஸும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
இதனால் ஆர்சிபி அணியை அடுத்ததாக வழிநடத்தப் போவது யார் எனும் கேள்வி இருந்துவந்தது. ஆர்சிபியின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுவந்தது. அதேபோல பாப் டு பிளஸிஸின் பெயரும் இதில் அடிபட்டுவந்தது. இதனிடையே விராட் கோலியின் ஓய்வு முடிவை அணி நிர்வாகம் இன்னும் ஏற்கவில்லை எனவும் எனவே விராட் கோலியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும்கூட சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில் பாப் டு பிளசிஸ் ஆர்சிபி அணிக்குக் கேப்டனாகத் தற்போது அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணிக்காக விளையாடிவந்த அவர், அவ்வணியின் நம்பிக்கைக்குரிய துவக்க வீரராக விளங்கிவந்தார். நடப்பு ஏலத்தில் அவர் ஆர்சிபி அணிக்கு வந்த நிலையில் தற்போது அவருக்குக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!
சர்வதேச டி-20 இல் தென் ஆப்பிரிக்கா மற்றும் உலக லெவன் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள அவர், கோமில்லா விக்டோரியன்ஸ், பார்ல் ராக்ஸ் மற்றும் செயிண்ட் லூசியா கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கும் கேப்டனாக இருந்து அனுபவம் பெற்றவர் ஆவார். அதேநேரம், ஐபிஎல்லில் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்பது இதுவே முதன்முறை. இதுவரை ஐபிஎல்லில் கோப்பை வெல்லாத அணிகளுள் ஒன்றாக இருந்துவரும் ஆர்சிபி அணி இம்முறையாவது அதை நிறைவேற்றுமா எனும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது DC: என்ன ஸ்பெஷல்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR