"ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!

ஐபிஎல் 2022  நடைமுறையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு அணி 14 போட்டிகளில் விளையாடவுள்ளது. சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்ளவுள்ளது.   

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 11, 2022, 02:13 PM IST
  • "ஐபிஎல் திருவிழா 2022"
  • நடைமுறையில் புதிய மாற்றங்கள்
  • ஒரு அணி 14 போட்டிகளில் விளையாடவுள்ளது
"ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!  title=

உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான ஐபிஎல்-2022 தொடரானது வரும் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி வரை மொத்தம் 65 நாட்கள் நடைபெற இருக்கின்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தபட்டு வந்த ஐபிஎல் தொடர், இந்த வருடம் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

மும்பை, புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில்  போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணியான குஜராத் டைடன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் சேர்ந்து 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை  வீழ்த்தி கோப்பையை வென்றது. இதுவரை மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான், ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் உள்ளிட்ட அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு 2 புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் ஐபிஎல் தொடரின் நடைமுறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

அதாவது, குரூப் A, குரூப் B என்று இரு பிரிவுகளாக 10அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடைபெற்ற தொடர்களில் அதிக முறை இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பை கைப்பற்றிய தரவரிசை  அடிப்படையில் அணிகளின் வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி  5 முறை கோப்பையை வென்றுள்ளதால் குரூப் A-வில் முதல் அணியாக உள்ளது.

இதுபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளதால் குருப் - ”B” பிரிவில் முதல் அணியாக இடம்பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து  கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரூ, டெல்லி, பஞ்சாப், லக்னோ, குஜராத் அணிகள் அடுத்தடுத்து இடத்தை பெற்றிருக்கிறது. 

இந்த தரவரிசை படி, குரூப்-”A”பிரிவில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, லக்னோ அணிகளும், குரூப் - “B”வில் சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும் படிக்க | ஓய்வுபெற்றார் ஸ்ரீசாந்த்: ‘கனத்த இதயத்துடன் ஓய்வு பெறுகிறேன்’-ட்விட்டரில் மனம் திறந்தார்

ஒரு அணி மற்ற அணிகளோடு எத்தனை போட்டிகளில் விளையாடும் என்பதை பார்க்கலாம். 

கடந்த ஆண்டுவரை ஐபிஎல் தொடரில் ஒரு அணி மற்றொரு அணியோடு 2 போட்டிகளில் விளையாடும். ஆனால் தற்போது, தனது குரூப்-பில் உள்ள 4 அணிகளோடு இரண்டு முறையும், தனக்கு நிகராக குரூப் -”B”பிரிவில் உள்ள அணியோடு இரண்டு முறையும், மற்ற 4அணிகளோடு ஒருமுறையும் என மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

அதாவது, சென்னை அணி குரூப்-”B”பிரிவில் ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், குஜராத்  அணிகளோடு இரண்டு முறையும், தனக்கு நிகராக குரூப்-”A”பிரிவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2 முறையும், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, லக்னோ அணிகளோடு ஒருமுறை என மொத்தம் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். இதே போன்ற நடைமுறையில்தான் பிற அணிகளும் விளையாடும். 

முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்

MSDhoni

ஐபிஎல் திருவிழா என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு இருக்கும். தல தோனியின் கை விரல் அசைவை கூட சப்பா என்ன ஸ்டைல் என்ன நிதானம் என புகழாத ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் அந்த அணிக்கான ரசிகர்களின் வரவேற்பு இருப்பது இயல்புதான்.

மேலும் படிக்க | சுழற்பந்து மன்னன் ஷேன் வார்னின் கடைசி நிமிடங்கள்: விவரித்து வருந்திய நண்பர்

ஆனால், தல தோனிக்கு மட்டும் சக வீரர்கள், பிற அணி ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த ஐபிஎல் திருவிழா கொண்டாட்டத்தின் உற்சவ பூஜையாக சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. ”தல” தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன்  சென்னை அணியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

புதிதாக எடுக்கபட்டுள்ள இளம் வீரர்களுடன் புதிய வியூகத்தில் தனது முதல் போட்டியில் வரும் 26ம் தேதி மும்பை வான்கடே  மைதானத்தில் இரவு 7.30மணிக்கு களம் இறங்கவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News