பாபர் அசாமுடன் ஒரு பெண் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வேகமாக பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படத்தின் கேப்சனில் பாபர் அசாம் தன்னுடைய சகோதரியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவருடன் எடுத்த புகைப்படம் தான் இது என்று எழுதப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் பலரும் உண்மை தன்மை குறித்து தேடத் தொடங்கினர். அதில் பாபர் அசாமுடன் இருக்கும் பெண், அவரது உறவுக்கார பெண் தான். ஆனால் அவரை பாபர் அசாம் திருணம் செய்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படியொரு வதந்தியை யாரோ வேண்டும் என்றே இணையத்தில் பரப்பி விட்டுள்ளனர். அதுவும் சகோதரியை திருமணம் செய்து கொண்டதாக பொய் தகவலை பரப்பி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். அவர் மீது மட்டுமல்லாமல் அவர் சார்ந்திருக்கும் மதம் குறித்தும் இந்த புகைப்படத்தை வைத்து பலர் அவதூறு கருத்துகளையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை தேடாமல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் இதுபோன்ற தகல்களை பலர் உண்மையென்று அப்படியே நம்பி தங்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 


மேலும் படிக்க | ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன்


மற்றவர்களுக்கு பகிருவதற்கு முன் இணையத்திலேயே அதன் உண்மை தன்மையை ஆராய்ந்தால் நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அதனை செய்ய மறுக்கும் பலரும் பொய் தகவலுக்கு இரையாகி தனிப்பட்ட ஒரு நபர் மீது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வன்மத்தையும், நச்சுக் கருத்துக்களையும் பரப்புவது இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 



இந்த போலி தகவலை பாபர் அசாமின் சமூக ஊடக் குழுவும் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. பாபரின் நிர்வாக நிறுவனமான சாயா கார்ப்பரேஷன், அவரது திருமணம் குறித்த வதந்திகளை மறுத்து ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "நவம்பரில் பாபர் ஆசாமின் திருமணம் என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் இது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கூட தெரியாத 'செய்தி'. சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதை தயவுசெய்து தவிர்க்கவும். நன்றி." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாபர் அசாமுக்கும் என்ன உறவு?


கூகுள் தேடலில் பாபர் அசாமுடன் பெண் எடுத்த செல்பியானது சர்வதேச கிரிக்கெட் நடுவரான அலீம் தார் மகனின் திருமணத்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. அந்த பெண்ணின் பெயர் ஜரா தார். அவர் கிரிக்கெட் நடுவர் அலீம் தாரின் மருமகள். பாபர் அசாமின் உறவினரும் கூட. 


மேலும் படிக்க | கெத்து காட்டிய கில், கோலி... இன்னும் யோ-யோ டெஸ்டை செய்யாத 5 இந்திய வீரர்கள் யார் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ