இந்தியாவிற்கு இரண்டாம் உலக கோப்பை வென்று கொடுத்த கேப்டன் மகேந்திர சிங் தோனி திங்களன்று சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோனி 2004-ஆம் ஆண்டில் பங்களாதேஷுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார், ஆனால் ஆரம்ப போட்டியில் ரன்கள் ஏதும் இன்றி ரன் அவுட் ஆகி ரசிகர்களின் மனதில் நிற்காமல் சென்றார். தோனி தனது சர்வதேச வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தைக் காணவில்லை என்றாலும், அவர் இந்தியாவுக்கான அனைத்து வடிவங்களிலும் இதுவரை 17266 ரன்கள் குவித்து நிகரற்ற பலமாய் திகழ்கிறார்.




இந்திய ரயில்வேயுடன் டிக்கெட் சேகரிப்பவராகவும், தனது கிரிக்கெட் பயிற்சி இடையேயும் சிக்கி வந்த அவர், தனது முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீண்ட ஓய்வு பெறுவது வரை, MS தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை நீண்ட தூரம் பயணித்துள்ளது.




ஜார்க்கண்டில் இருந்து வந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தனது ஒருநாள் தொப்பியை டிசம்பர் 23, 2004 அன்று சிட்டகாங்கில் பங்களாதேஷுக்கு எதிராக பெற்றார். தோனியின் பங்களாதேஷ் தொடர் ஒரு சாதாரண அறிமுகத் தொடராகவே அமைந்தது. தோனி பங்களாதேஷில் நடந்த 3 போட்டிகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.


இருப்பினும், தோனி என்னும் பெரும் பெயருக்கான உழைப்பினை அவர் ஏப்ரல் 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு தொடரின் போது வெளிப்படுத்தினார். பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் முதல் முறையாக MS தோனியை 3-வது இடத்தில் பேட் செய்ய சவுரவ் கங்குலி அனுமதித்தார். பாக்கிஸ்தான் தாக்குதலை தோனி இடித்து, 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். அதன்பிறகு அவர் திரும்பிப் பார்க்கவில்லை... தனது பாதையில் வெற்றிகளுடன் முன்னெடுத்து சென்றுகொண்டு இருந்தார்.


பல ஆண்டுகளாக, தோனி இந்தியாவை உலக கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தரப்பாக மாற்றியுள்ளார். 2011-ஆம் ஆண்டில் உலகக் கோப்பை, 2007-ல் டி 20 உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 முக்கிய ICC கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் தோனி என்ற பெருமையினை பெற்றார்.


அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வெற்றிகரமான கேப்டனாக தோனி தசாப்தத்தை முடித்துள்ளார். பலரால் உலகின் சிறந்த பினிஷர் என்று புகழப்படும் தோனி, பல விருதுகளை நாட்டிற்கு கொண்டு வந்தார். 


இருப்பினும், ICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 தொடரின் அரையிறுதி போட்டியில் வெளியேறியதில் இருந்து தோனி அணிக்காக களத்தில் இறங்காமல் ஒதுங்கி இருக்கிறார்.  எனினும் அவர் மீண்டும் வருவார், மீண்டு வருவார் என ரசிகர்களை நம்பிக்கையில் உள்ளனர். வரலாறு பல படைத்த சாதனை நாயகனுக்கு இன்று சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது...