FIFA World Cup 2018: நைஜீரியாவை வீழ்த்தி அர்ஜெண்டீனா வெற்றி!
உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நைஜீரியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டீனா வீழ்த்தியது!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், அர்ஜெண்டீனா அணி, நைஜீரியாவை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது!
FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் 3வது லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் நைஜீரியா மற்றும் 2 முறை சாம்பியனான அர்ஜெண்டீனா அணிகள் மோதின. இதில், 1-2 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டீனா அணியில் சார்பில் விளையாடிய நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி 1 கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். இந்த கோலை சமன்படுத்த நைஜீரியா வீரர்கள் முயற்சித்தும் அர்ஜெண்டீனா அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 0-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் அந்த அணியில் சார்பில் விளையாடிய விக்டர் மோசஸ் இன்னொரு கோல் அடித்ததால் அர்ஜெண்டீனா அணிக்கு பலம் கிடைத்தது. ஆட்டத்தின் இறுதியில் மார்கோஸ் ரோஜோ 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது. இதன் மூலம் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.