ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்ய மற்றும் எகிப்து அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி ரஷ்யா அணி வெற்றி பெற்றுள்ளது.முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தனது முயற்சிகளை கைவிட்டனர். இதையடுத்து, இரண்டாம் பாதி ஆட்டத்தில் 47வது நிமிடத்தில், எகிப்தின் அகமது பதி சேம் சைடு கோல் அடிக்க ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவின் சார்பில் அடுத்தடுத்து டென்னிஸ் செரிசேவ் (59வது நிமிடம்), டிசியூபா (62வது நிமிடம்) கோல் அடித்ததின் மூலம் ரஷ்யா அணி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதியில், எகிப்தை 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அணி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை பெற்றுள்ளது.  


முன்னதாக, ரஷ்யா அணி தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில், எகிப்தை வீழ்த்தியதன் மூலம் ரஷ்யா அணி தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.