ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் ஃபிபா உலக்கோப்பை கால்பந்து தொடரின் 3_வது இடத்திற்கான போட்டி இன்று நடக்க உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. நான்கு அணிகள் பங்கேற்ற அரையிறுதி ஆட்டத்தில், முதல் சுற்றில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகள் மோதின. குரேஷியா அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 


அரையிறுதி போட்டியில் தோல்வியுற்ற பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று நடைபெறும் 3_வது இடத்திற்க்கான போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு வெண்கலப்பதக்கமும், ரூ.161 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படும். தோல்வி அடையும் அணிக்கு ரூ.148 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த ஆட்டம் இன்று இரவு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும். 


ஏற்கனவே கடந்த ஜூன் 28 ஆம் தேதி, இந்த உலகோப்பை தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து எதிராக 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 22 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 15 ஆட்டத்திலும், பெல்ஜியம் அணி 2 ஆட்டத்திலும், 5 ஆட்டங்கள் சமநிலையில் முடிந்துள்ளது.


நாளை 15 ஆம் தேதி நடைபெற உள்ள பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் மோத இருகின்றன.