FIFA World Cup 2018: Russia-ல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்- US எச்சரிக்கை
32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் தொடங்கி உள்ளது. இந்த போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்படுத்தப் பட்டுள்ளன.
இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் லுஸ்னிகி மைதானத்தில் மோதின. ரஷிய அணி சவுதிஅரேபியா அணியை வீழ்த்தி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ரஷ்ய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உருகுவே அணி எகிப்தையும், இரண்டாவது ஆட்டத்தில் ஈரான் அணி மொராக்கோவையும் வீழ்த்தின.
மூன்றாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.