Round of 16 : மெஸ்ஸியின் புதிய சாதனை... காலிறுதியில் கால் வைத்தது அர்ஜென்டீனா!
பிபா உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா அணி காலிறுதிக்குச் சுற்றுக்கு முன்னேறியது.
கத்தார் நாட்டில் கடந்த நவ. 20ஆம் தேதியில் இருந்து பிபா உலகக்கோப்பை 2022 தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றில் 32 அணிகள், ஒரு குரூப்புக்கு 4 அணிகள் வீதம், 8 குரூப் பிரிக்கப்பட்டன. இதில், குரூப்பில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முந்தைய சுற்றான, ரவுண்ட் ஆப் 16இல் மோதிக்கொள்ளும்.
இந்நிலையில், பிபா உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் (டிச. 2) நிறைவுபெற்றன. இதையடுத்து, ரவுண்ட் ஆப் 16 சுற்று நேற்று (டிச. 3) தொடங்கப்பட்டது.
இதில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு, ரவுண்ட் ஆப் 16 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி, முதல் அணியாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்கா அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து, இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற மற்றோரு ரவுண்ட் ஆப் 16 போட்டியில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா அணியை, ஆஸ்திரேலியா சந்தித்து. அர்ஜென்டீனா அணி குரூப் சுற்றின் முதல் போட்டியில், கத்துக்குட்டி சவுதி அரேபியாவிடம் உதை வாங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
மேலும் படிக்க | ரன் அடிக்காத நேரத்தில் ரிஷப் பன்டை சீண்டும் முன்னாள் காதலி
தொடர்ந்து, மெஸ்ஸி இன்றைய போட்டியில், களமிறங்கியதை அடுத்து, அவர் மிகப்பெரும் மைல்கல்லை அடைந்தார். கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளை சேர்த்து, சீனியர் கால்பந்து அரங்கில், மெஸ்ஸி தனது 1000ஆவது போட்டியில் விளையாடினார்.
இந்த மாபெரும் மைல்கல் ஒருபுறம் இருக்க, மெஸ்ஸி மற்றொரு பெருமையையும் இன்றைய போட்டியில் பெற்றார். போட்டியின் 35ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி, தனது உலகக்கோப்பை வரலாற்றி முதல்முறையாக நாக்-அவுட் சுற்றுகளில் கோல் அடித்துள்ளார். 2006, 2010, 2014, 2018, 2022 என ஐந்து பிபா உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிவிட்ட மெஸ்ஸி, தற்போதுதான் நாக்-அவுட்டில் கோல் அடித்துள்ளார். மேலும், இது அவரது 94ஆவது சர்வதேச கோலாகும். மெஸ்ஸியின் கோலால், அர்ஜென்டீனா 1-0 என்ற கணக்கில் முதல் பாதியில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி தொடங்கி 12ஆவது நிமிடத்திலேயே, அதாவது போட்டியின் 57ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்து மிரட்ட, அர்ஜென்டீனா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்து, 77ஆவது நிமிடத்தில், அர்ஜென்டீனா வீரர் என்ஸோ பெர்ணான்டஸ், தங்கள் அணியின் கோல் போஸ்ட்டிலேயே தவறுதலாக கோல் அடிக்க, அந்த கோல் ஆஸ்திரேலியாவின் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம், 2-1 என்ற கோல் கணக்கில், அர்ஜென்டீனா கடைசிவரை போராடி தனது வெற்றியை பதிவுசெய்தது. அர்ஜென்டீனா அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறியது.
ரவுண்ட் ஆப் 16 சுற்றின் மூன்றாவது போட்டியில், பிரான்ஸ் - போலந்து அணிகள் இந்திய நேரப்படி இன்று (டிச. 4) இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன. நான்கவாது போட்டியில், இங்கிலாந்து - செனகல் அணிகள் இந்திய நேரப்படி நாளை (டிச. 5) நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ