முதல் டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டம், இந்திய அணி பேட்டிங்
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொயீன் அலி 117 ரன்கள் குவித்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எடுத்து விட்டது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், கவுதம் காம்பீர் நிதானமாக ஆடினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 23 ஓவரில் 63 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 25 ரன்னுடனும், காம்பீர் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 108.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் முரளி விஜய் 126 ரன்களும், சேதேஷ்வர் புஜாரா 124 ரன்களும் குவித்தனர். இன்று நான்காவது நாளாக விராத் கோஹ்லியுடன் ரஹானே இணைந்து விளையாடி வருகிறார்கள்.