உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் அன்றைய ஆட்டம் முடிவு பெற்றது. 


இந்த நிலையில், 5-வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி தற்போது நிலவரப்படி 9 விக்கெட்டு இழப்புக்கு 236 ரன் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றியை நெருங்கி கொண்டு இருக்கிறது. வெற்றிக்கு இன்னும் ஒரே ஒரு விக்கெட் தூரம் தான் இருக்கிறது.