எதிர்வரும் IPL 2020 தொடருக்கான ஏலம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், ஏலத்தில் பெரிதும் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கும் 5 all-rounder பற்றி இந்த பதிவு கூறுகிறது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி20 வடிவ போட்டிகளில் `மல்டி டாஸ்க்` வீரர்களுக்கு மவுசு எப்போதும் அதிகம் என கூறலாம். இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) ஏலத்திற்கு வரும்போது ஆல்-ரவுண்டர்கள் எப்போதும் ஹாட் கேக்குகளைப் போலவே விற்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெறும் ஏலத்தின் ஆல்-ரவுன்டர்களில் ஆதிக்கும் எவ்வாறு இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு ஆகும். 


IPL அணி உரிமையாளர்களிடையே தேவைப்படக்கூடிய தகுதிகளை ஏலத்தில் வரும் வீரர்கள் பூர்த்தி செவ்வரா? என்பது ஏலத்தின் போது தெரியும் என்ற போதிலும் யார் யார் அந்த தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வர் என்பது நம் மனிதில் எழும் கேள்வி... அந்த வகையில் IPL 2020 ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐந்து ஆல்ரவுண்டர்களை குறித்து ஒரு பார்வை...


க்ளென் மேக்ஸ்வெல் - மனநல காரணங்களால் ஒரு இடைவெளியில் இருந்து திரும்பி வரும் மேக்ஸ்வெல், அவர் போட்டிகளில் காட்ட அதிக எண்ணிக்கையில் (69 போட்டிகளில் 22.90 சராசரியில் 1397 ரன்கள்) இல்லை என்றாலும் அவரது விளையாட்டு மாற்றும் திறன் உரிமையாளர்களை இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேக்ஸ்வெல் தனது ஆஃப்-ப்ரேக் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமை கொண்டவர், அதனுடன் அவர் ஒரு சிறந்த பீல்டரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.


கிறிஸ் மோரிஸ் - மோரிஸ் 2019-ஆம் ஆண்டில் குறைந்த செயல்திறன் காரணமாக இந்த ஆண்டு ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார். ஆனால் IPL-ல் இருந்து பெயர் சூட்டிய தென்னாப்பிரிக்க பந்துவீச்சு ஆல்ரவுண்டர் டெத் பந்துவீச்சுக்கு வரும்போது எப்போதும் அவர் அணிக்கு ஒரு சொத்து. அவர் தவறாமல் விக்கெட்டுகளை எடுக்கும் திறனும் கொண்டவர். இதன் காரணமாக அவர் உரிமையாளர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜிம்மி நீஷம் - நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் IPL-லின் முற்பகுதியில் இல்லை என்ற போதிலும், 7-வது மற்றும் 8-வது சீசன்களில் முறையே டெல்லி ட்ரேடெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். நீஷாமுக்கு அப்போது ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஆல்ரவுண்டர்களில் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவரான இவர் வரும் IPL தொடரிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  50 ஓவர் உலகக் கோப்பையிலும் அவர் பிளாக் கேப்ஸிற்காக சிறப்பாகச் செயல்பட்டார், இறுதிப் போட்டிக்கு வர அவர்களுக்கு உதவினார். 50 லட்சம் அடிப்படை விலை அவருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நீஷம் இந்த விலையினை பன்மடங்கு உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆண்டிலே பெஹ்லுக்வாயோ - ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஒரு பயன்பாட்டு கிரிக்கெட் வீரர், அதன் காரணமாக அவர் தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அவர் இதற்கு முன்னர் IPL-ல் விளையாடவில்லை, என்றபோதிலும் அவரது சர்வதேச போட்டிகள் IPL அணி உரிமையாளர்களை கவர மறக்கவில்லை. மேலும் அவர் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு அறியாத காரணியாக இருப்பதால் ஏலத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிறிஸ் வோக்ஸ் -  உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இருந்தார், இவரது பேட் மற்றும் பந்து நிரூபித்த திறமை மீண்டும் IPL ஏலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக வோக்ஸின் டெத் பந்துவீச்சு முறை, பேட்டிங் பங்களிப்பு உரிமையாளர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது எனலாம்.