லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
ஸ்பெயினில் நடைபெற்ற லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரி அணி கோப்பையைக் கைப்பற்றியது.
மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரி அணி கோப்பையைக் கைப்பற்றியது.
20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் மாட்ரிட் அணி வென்றது. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.
லீக் ஆட்டங்கள் முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 4 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. ரியல் மாட்ரிட் அணி 24 வெற்றி, 9 டிரா, 4 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தது. 2 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
Also Read | Ind vs NZ WTC Final: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது!
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட், வல்லாடோலிட் அணியையும், ரியல் மாட்ரிட், வில்லா ரியல் அணியையும் எதிர்கொண்டன.. ஆட்டத்திற்கு பிறகு அட்லெடிகோ மாட்ரிட் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்பானிஷ் சாம்பியன்ஷிப்பை அட்லெடிகோ மாட்ரிட் அணி வென்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பிற விளையாட்டுக்களைப் போலவே லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளும் பார்வையாளர்கள் யாரும் இன்றி நடைபெற்றது.
இருப்பினும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே இருந்து அணிகளை உற்சாகப்படுத்தினர்.
Also Read | ஓரின சேர்க்கை திருமணத்தை அயர்லாந்து சட்டப்பூர்வமாக்கிய நாள் May 22
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR