இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் சர்வதே ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் தனது 12 ஆண்டு கால சர்வதே விளையாட்டிற்கு பின்னர் தற்போது இளைஞர்களுக்க வழிவிடும் நோக்கில் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். 


சுமார் 350 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சர்தார் சிங், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது இந்திய ஹாக்கி அணியை வழிநடத்திய இளம் இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றிருந்தார்.


இந்தியாவிற்காக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவருக்கு 2012-ல் அர்ஜூனா விருதும், 2015-ல் பத்ம்ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெற்று பல சாதனைகளை படைத்துள்ள இவர் தற்போது தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இதன்கான காரணங்களாக வரும் 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டது, வயது, வேகமின்மை உள்ளிட்ட காரணங்கள் போன்றவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.


தனது ஓய்வினை குறித்து தெரிவித்துள்ள சர்நார் சிங்... "நான் சர்வதேச ஹாக்கியில் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன். என் வாழ்நாளில அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்றுவிட்டேன். 12 ஆண்டுகள் என்பது மிக நீண்ட பயணம். தற்போது இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் என்பதால் ஓய்வெடுத்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்!