சரியான நேரத்தில் கோலி ஃபார்மில் இருக்கிறார் - நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர்
விராட் கோலி சரியான நேரத்தில் ஃபார்மில் இருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி சமீபத்தில் ஃபார்ம் அவுட்டில் சிக்கியிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணியும் கவலையில் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தனது ஃபார்மை மீட்டெடுத்தார் கோலி. டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் சூழலில் கோலி ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் உத்வேகத்தை கொடுக்குமென்று கருதப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலி குறித்து பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர், “ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணியில் விராட் கோலியுடன் விளையாடிய நேரத்தை மிகவும் ரசித்தேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்பியிருப்பது சிறப்பாகும். அவர் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.
நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இன்னும் நிறைய திறமைகள் வெளிப்படும் என்று நினைக்கிறேன். போட்டி ஆஸ்திரேலியாவில் நடப்பதாலும் நடப்பு சாம்பியனாக இருப்பதாலும் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது.
மேலும் படிக்க | பும்ராவுக்கு பதிலாக இந்திய அணிக்கு வந்திருக்கும் ’பெங்களூரு புயல்’
சொந்த மண்ணில் சில ஆட்டங்களில் இந்தியா விளையாடிய விதம், உலகக்கோப்பை போட்டிக்கு செல்வதற்கு அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும். நியூசிலாந்து அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த சில ஐசிசி தொடர்களில் கடைசி 4 இடங்களுக்குள் நியூசிலாந்து அணி இருந்திருப்பதை கவனிக்க வேண்டும்” என கூறினார்.
மேலும் படிக்க | உலகக்கோப்பை கனவு 'அம்போ' - இந்திய அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்!
முன்னதாக, ராஸ் டெய்லர் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் உரிமையாளர் தன்னை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக தான் எழுதிய சுயசரிதையில் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ