ஆஸ்திரலியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 8ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதன் தகுதிச்சுற்று போட்டிகள் அக்.16ஆம் தேதி தொடங்கும் நிலையில், சூப்பர்-12 சுற்று அக்.22ஆம் தேதி தொடங்குகிறது.அதன் இறுதிப்போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அணிகளும் தங்களின் ஸ்குவாடை அறிவித்து வருகிறது. அதன்படி ரோஹித் தலைமையிலான இந்திய அணியும் சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை அணி அறிவிப்பதற்கு முன்னதாகவே, ஆல்-ரவுண்டர் ஜடேஜா முழங்கால் காயம் ஏற்பட்டது. இதனால், உலகக்கோப்பையில் பங்கேற்க இயலாது என அறிவிக்கப்பட்டது. சிறப்பான ஃபார்மில் இருந்து இடதுகை ஆல்-ரவுண்டரான ஜடேஜா அணியில் இல்லாதது மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அவருக்கு பதிலாக அணியில் இணைந்த அக்சர் படேல் தற்போது ஜடேஜாவின் பணியின் செம்மையாக செய்து வருவதால், இந்திய அணி நிர்வாகம் பெருமூச்சுவிட்டது.
ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு, ஆஸ்திரேலியா உடனான டி20 தொடரை அபாரமாக வென்றதால் அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருப்பதாக தோன்றியது. ஆனால், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தற்போதைய முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலகக்கோப்பையில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற, தென்னாப்பிரிக்கா உடனான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கவில்லை. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பிசிசிஐ தனது ட்வீட்டில், முதுகு பிடிப்பு பும்ரா இந்த போட்டியில் விளையாட மாட்டார் என அறிவித்தது. மேலும், பயிற்சியின் போது, தனக்கு முதுகு பகுதியில் வலியிருப்பதாக பும்ரா கூறியதாக பிசிசிஐ தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தது.
அந்த வகையில், அவரின் காயம் குறித்து பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர்,"வரும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா விளையாடப்போவதில்லை. அவரின் முதுகு பிரச்சனை மிகவும் தீவிரமாக உள்ளது. அது அழுத்த முறிவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் 6 மாத காலத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும்" என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதுகு வலி காரணமாக, ஆசிய கோப்பை தொடரையும் தவறவிட்ட பும்ரா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்று, உடல்தகுதி பெற்றார். இதனால், ஆஸ்திரேலிய தொடரில் கடைசி 2 போட்டிகளை மட்டுமே விளையாடினார். தற்போது, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் உலகக்கோப்பையில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
உலகக்கோப்பை அணியின் காத்திருப்போர் பட்டியலில் முகமது ஷமி, தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பும்ரா விலகினால், அவருக்கு பதில் யார் அணியில் சேர்க்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுடைய நேற்றைய போட்டியில், சிறப்பாக விளையாடிருந்தார். பும்ரா விலகும்பட்சத்தில், இந்தியாவின் டெத் ஓவர் பௌலிங் மிகவும் பலவீனமாகியுள்ளது. ஹர்ஷல் படேல், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோரின் அழுத்தம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காது! பிசிசிஐ திட்டவட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ