புது டெல்லி: முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஓய்வுபெற்ற பின்னர், இந்தியாவில் ஒளிபரப்பாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றினார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு அற்புதமான இடம். இந்தியர்கள் எப்போதும் மிகவும் அன்பாக வரவேற்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தானுடன் எந்த விரோதத்தையும் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் கூறியது, இந்தியா ஒரு சிறந்த இடம். இந்தியர்கள் மிகவும் அருமையானவர்கள். பாகிஸ்தானுடனான எந்தவிதமான பகைமையையும் அல்லது எந்தவிதமான போரையும் அவர்கள் விரும்புவதாக நான் ஒருபோதும் உணரவில்லை. ஆனால், நான் இந்திய நாட்டில் தொலைக்காட்சிகள் நிகழ்சியில் கலந்துக்கொள்ள சென்றபோது, ஒருவேளை ​​நாளை போர் நடக்கும்? என்ற எண்ணம் தோன்றுகிறது. 


நான் இந்தியா முழுவதும் விரிவாகப் பயணம் செய்திருக்கிறேன், இந்திய நாட்டை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். இன்றும் நான் சொல்ல முடியும். இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற விரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முன்னேற்றப் பாதை பாகிஸ்தான் வழியாகவும் இருக்கிறது. இதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஒரு தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சியின் போது அக்தர் கூறினார்.


கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஐ.பி.எல் (IPL 2020) தொடரில் ஏற்பட்ட பாதிப்பால், இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


இந்தியாவுக்கு இந்த இழப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது மற்றும் இந்தியா செழிக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இது எல்லாம் நடக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் மேலும் கூறினார்.


கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (Pakistan Super League) சுருக்கப்பட்டது மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) உள்ளிட்ட உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒத்திவைத்தல் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ஏற்கனவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.