தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் JP டுமினி, ரோஹித் ஷர்மாவை தனது விருப்பமான இந்திய பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பொம்மி ம்பாங்வாவுடன் இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வின் போது டுமினி இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் "ரோஹித் ஷர்மா(Rohit Sharma) எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன், அவரது பிக்-அப் புல் ஷாட்டை நான் விரும்புகிறேன்" என்று டுமினி குறிப்பிட்டுள்ளார்.


T20 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் IPL இரண்டிலும் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் ஷர்மா...


2019 உலகக் கோப்பையில் வெறும் ஒன்பது போட்டிகளில் விளையாடிய ரோஹித் தனது பெல்ட்டின் கீழ் 648 ரன்கள் (சராசரியாக 81.00 ரன்கள்) எடுத்த நிலையில், போட்டியின் ஒரே பதிப்பில் ஐந்து சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார்.


இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் பிரிவுக்கு துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் இதுவரை 224 ஒருநாள், 108 டி20 மற்றும் 32 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். மேலும் அவர் அனைத்து வடிவங்களிலும் 14,029 ரன்கள் எடுத்துள்ளார்.


ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்த உலகின் ஒரே வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்ததன் மூலம் 50 ஓவர் வடிவத்தில் அதிக தனிநபர் ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.


ரோஹித் ஷர்மாவுக்கு பெண் வேடமிட்டால் எப்படி இருக்கும்...? நீங்களே பாருங்கள்!...


கடந்த ஆண்டு, வலது கை பேட்ஸ்மேனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கத் துவங்கினார். இதனைத்தொடர்ந்து அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கற்பனையையும் கைப்பற்றினார்.


இந்த ஆண்டு மார்ச் 29 அன்று துவங்க இருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) குறித்த காலத்தில் துவங்கியிருந்தால், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் ஷர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக IPL காலவரையின்றி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.