FIFA_2018: நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது பிரான்ஸ்!!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது!
FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது.
கஸன் நகரில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில் ஃப்ரான்சு மற்றும் அர்ஜெண்டின அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார் ஃப்ரான்சு வீரர் க்ரைஸ்மேன்.
அடுத்து 41 வது நிமிடத்தில் அர்ஜெண்டின் வீரர் டி மரியா கோல் அடித்தார். தொடர்ந்து 48வது நிமிடத்தில் அர்ஜெண்டின வீரர் மெர்காடோ கோல் அடிக்க, அர்ஜெடினா முன்னிலை அடைந்தது. பின், 57 வது நிமிடத்தில் ஃப்ரான்சின் பவார்டும், 64 மற்றும் 68 வது நிமிடத்தில் கைலியானும் கோல் அடித்தனர்.
பின், கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டின வீரர் அகியூரோ கோல் அடித்தார். முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் ஃப்ரான்சு அணி முதல் அணியாக காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. கடந்த 2014 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அர்ஜெண்டின அணியினர், இந்த முறை நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது அந்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.