அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற டொமினிக் தீம் (Dominic Thiem), பிரெஞ்சு ஓபனில் 12-ஆம் நிலை வீரரானஅர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானிடம் (Diego Schwartzman) தோல்வியடைந்தார். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போட்டியில், ஸ்வார்ட்ஸ்மேன் 7-6 (1), 5-7, 6-7 (6), 7-6 (5), 6-2 என்ற செட் வெற்றி பெற்றார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போட்டிக்குப் பிறகு பேசிய, 28 வயது  ஸ்வார்ட்ஸ்மேன், மாறுபட்ட முறையில் விளையாடியது தான் Dominic Thiem-ஐ வெற்றி பெற உதவியது என்று கூறினார்.


"ஆட்டக்களத்தில் விளையாடும் ஒவ்வொரு முறையும் புதிதாக உத்திகளை கையாள வேண்டும்," என்று ஸ்வார்ட்ஸ்மேன் கூறினார். "எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது ஆக்ரோஷமாக விளையாடுவேன், இல்லாதபோது பாதுகாப்புடன் விளையாடுவேன். இன்று நான் விளையாடியது வித்தியாசமான விளையாட்டு என்று நினைக்கிறேன். டொமினிக் அபாரமாக ஆடினார், நான் பல முறை வலைக்கு அருகில் சென்றேன். அதுவும் எனக்கு சாதகமாக இருந்தது” என்று அவர் கூறினார்.


இந்த வெற்றி ஸ்வார்ட்ஸ்மானுக்கு ஏடிபி தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம் பெற உதவலாம். புதிய ATP தரவரிசைப் பட்டியல் திங்கட்கிழமையன்று வெளியிடப்படும்.


12 முறை சாம்பியனான ரஃபேல் நடாலுடன் அரையிறுதிப் போட்டியில் ஷார்ட்ஸ்மேன் விளையாடுவார்.


நடால், ஆடவர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். அவர், அனுபவத்தில் குறைந்த ஜானிக் சின்னரை (Jannik Sinner) 7-6 (4), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்தப் போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கு நீடித்தது.


READ ALSO | ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தை ரசிக்கும் 'Just Jadeja things' ரசிகர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR