பிரெஞ்ச் ஓபன்: 11-வது முறையாக பட்டம் வென்றார் ரபேல் நடால்!
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஏழாம் நிலை வீரர் டொமினிக் தீமை வீழ்த்தி, ரஃபேல் நடால் 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் கோப்பையை வென்று சாதனை!!
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஏழாம் நிலை வீரர் டொமினிக் தீமை வீழ்த்தி, ரஃபேல் நடால் 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் கோப்பையை வென்று சாதனை!!
ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்றுவந்தது. ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடால், ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீமுடன் மோதினார்.
நடாலின் ஆட்டத்துக்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் நடால் கைப்பற்றினார். 3-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று, 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஒட்டுமொத்த கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், 17-வது பட்டத்தை வென்று நடால் சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் கோப்பையை 11 முறை வென்றிருக்கிறார் என்பது குரிப்பிப்டதக்கது!!