முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதானின் பிறந்தநாளான இன்று அவருக்கு 36 வயது. அவரது தோழர்களும், சகாக்களும் நண்பர்களும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை இர்ஃபானுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இர்ஃபான் பதான் தனது அற்புதமான ஆட்டங்களால் பலரின் இதயங்களை வென்றார். முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த ஒரே இந்திய வீரர் இர்ஃபான் பதான்.


சூப்பர் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, கிரிக்கெட் வர்ணனையிலும் மிகவும் பிரபலமானவர் இர்ஃபான் பதான். கிரிக்கெட் மீதான தனது ஈடுபாட்டாலும், நுண்ணறிவாலும் எண்ணற்ற ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் இர்ஃபான் பதான்.



பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது அணியின் ஜூனியர் வீரருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.  


2007 ஆம் ஆண்டில் இந்தியாவின் T20 போட்டித்தொடரின் வெற்றி நாயகன் யுவராஜ் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ‘ஆட்ட நாயகன்’ என்ற விருது பெற்ற இர்ஃபானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  



கெளதம் கம்பீரும் ட்விட்டரில் இர்ஃபான் பதானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



இர்ஃபானுக்கு நெருக்கமானவரான ஹர்பஜன் சிங், இதயத்தைத் தொடும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்..



பதான் 2000 களின் முற்பகுதியில் தனது அற்புதமான பந்துவீச்சு நிகழ்ச்சிகளால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். 2003 டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் நுழைந்தார். சில நாட்களுக்குப் பிறகு அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் பதான் பாதம் பதித்தார்.  


பதான் பந்து வீச வந்தால் எதிராளிக்கு உதறல் இருக்கும் என்று நகைச்சுவையாக சொல்வதுண்டு. பந்து வீசும் திறமைக்காக புகழ் பெற்ற இர்ஃபான் பதான்,  பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரமுடன் ஒப்பிட்டு பேசப்படுபவர்.  


சிறந்த பந்தாளராக மட்டுமல்ல, மட்டையையும் சரியாக கையாண்டு அணிக்கு அணி சேர்ப்பதில் வல்லவர் பதான் என்ற பட்டத்தையும் பெற்றார் இர்ஃபான். இந்திய அணிக்காக பல முறை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ளார். 
120 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பதான், 173 விக்கெட்டுகளை வீழ்த்தினார், 1544 ரன்கள் எடுத்தார்.  29 டெஸ்ட் போட்டிகளில், அவர் 100 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 1105 ரன்கள் எடுத்து, 31.57 என்ற சராசரி ரன் ரேட்டை பதிவு செய்தார்.   


2012 இல் பதான் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார். 2020 ஜனவரியில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த பதானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! 


தொடர்புடைய செய்தி | Video Call மூலம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மந்தீப் சிங் @IPL 2020


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR