தென்னாப்பிரிக்காவுக்கு இப்போ திருப்பி கொடுக்கும் கே.எல்.ராகுல் - பிளாஷ்பேக்
KL Rahul: 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் சுற்றுப் பயணம் செய்த கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்தது. ஆனால் இப்போது வெற்றியுடன் ஒருநாள் தொடரை தொடங்கியுள்ளது.
கே.எல்.ராகுல் தலைமையில் வெற்றி
2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் கே.எல்.ராகுலுக்கு ஒரு மோசமான அனுபவம் கிடைத்தது. அவரது தலைமையில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு எதிராக வொயிட்வாஷ் ஆனது. அந்த அணிக்கு எதிராக ஆடிய 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த காயத்துக்கு மருந்துதேடுவதற்கு கே.எல். ராகுலுக்கு சரியான வாய்ப்பை கொடுத்திருக்கிறது பிசிசிஐ. மீண்டும் அவரது தலைமையிலேயே இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையில் ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
தென்னாப்பிரிக்கா சுருண்டது
ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்கிரம் முதலில் பேட்டிங் விளையாடுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெஹ்லுக்வாயோ 49 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஓப்பனிங்கில் அதிரடியாக ஆடிய டோனி டி ஜோர்ஜி 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் திறம்பட விளையாடவில்லை.
இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு
இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் டாப் கிளாஸாக பந்துவீசினர். இவர்கள் இருவரின் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றத்தில் விழுந்தது. அதில் இருந்து அந்த அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை. முடிவில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தென்னாப்பிரிக்கா மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றார்.
இந்திய அணி அபார வெற்றி
இதன்பிறகு எளிதான வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களுக்கு அவுட்டானாலும் மறுமுனையில் இந்திய அணிக்காக முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கியிருக்கும் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து சாய் சுதர்சன் நிதானமாகவும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடினர். வெற்றிக்கு மிக அருகில் இருக்கும்போது ஸ்ரேயாஸ் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா ஒரு ரன் எடுக்க, கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பெறும் முதல் வெற்றியாகவும் இது அமைந்தது.
மேலும் படிக்க | கில்லியாக சொல்லியடிப்பாரா கில்... ஏலத்தில் குஜராத்தின் பிளான் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ