Latest Cricket Updates: 2023 ஐபிஎல் சீசனில் இருந்து விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் சுமார் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை லீக் சுற்றில் தோற்கடித்த பிறகு கோலியும் கம்பீரும் களத்தில் மோதிக்கொண்டது கிரிக்கெட் வரலாற்றில் எவ்வளவு எளிதாக மறக்கடிக்க முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே ஆடுகளத்தில் கம்பீர் மற்றும் கோலி முதன்முதலாக மோதிக்கொண்டனர். அப்போதும் விராட் பெங்களூரு அணியில் தான் இருந்தார், கம்பீர் கொல்கத்தா அணி கேப்டனாக இருந்தார். 2023 ஐபிஎல் சீசனில், விராட் கோலிக்கும், கம்பீருக்கும் மட்டுமின்றி அதேபோட்டியில் விராட் கோலி, ஆப்கன் வீரர் நவீன்-உல்-ஹக் உடனும் கடுமையான வாக்குவாதத்தை மேற்கொண்டார். அதன்பின், தான் கம்பீருக்கும், விராட்டுக்கும் மோதல் அதிகரித்தது.


இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஹ்சாத் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். "நான் பார்த்ததில், அச்சம்பவம் மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த ஆப்கானிஸ்தான் வீரருக்கும் (நவீன்) விராட் கோலிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயங்கள் நடப்பது தான். 


மேலும் படிக்க | சண்டையை ஆரம்பித்தவர் அவர் தான்... நறுக் என சொன்ன நவீன் உல்-ஹக்!


ஆனால் உங்களால் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால், கம்பீர் இப்போது உலகின் மிகப்பெரிய வீரராக இருக்கும் தனது சொந்த நாட்டின் வீரரை ஏன் குறிவைத்து பேசுகிறார் என்பதுதான். கோலிக்கு எதிராக அவர் காட்டிய சைகைகள் சரியானதில்லை. எங்கள் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதால் பார்வையாளர்கள் என்ற எங்கள் கருத்து மாறிவிட்டது. 


கம்பீர் பொறாமையால் ஏதோ ஒன்றை உருவாக்க முயன்றது போல் தோன்றியது. ஐபிஎல்லுக்கு ஒரு பிராண்ட் உள்ளது, எந்த இந்திய சூப்பர் ஸ்டாரையாவது யாரேனும் - இந்த விஷயத்தில் நவீன் - ஏதாவது பேசினால், டிரெஸ்ஸிங் ரூமிற்குள் வெறுப்பு பரவுகிறது என்று அர்த்தம். அப்போதுதான், ஒரு வீரர் சென்று தவறாக நடந்து கொள்வதற்கான நம்பிக்கையைப் பெறுகிறார்" என்றார்.  


விராட் கோலி - நவீன் - கம்பீர் ஆகியோருக்கு இடையேயான இந்த சர்ச்சை ஐபிஎல் முடிந்தும் தற்போது தொடர்ந்து வருகிறது. இவர்கள் சமூக வலைதளங்களிலும் மற்றொரு வீரரை விமர்சித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


விராட் கோலி - நவீன் - கம்பீர் ஆகியோருக்கு இடையேயான இந்த சர்ச்சை ஐபிஎல் முடிந்தும் தற்போது தொடர்ந்து வருகிறது. இவர்கள் சமூக வலைதளங்களிலும் மற்றொரு வீரரை விமர்சித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியின்போது, அமித் மிஸ்ரா கோலி குறித்து கள நடுவர்களிடம் புகார் அளித்துள்ளார். 


அதாவது, 10ஆவது வீரராக களமிறங்கிய நவீனை, விராட் கோலி தொடர்ந்து சீண்டுகிறார் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு பின் விராட், ஆப்கான் வீரர் நவீன் ஆகியோர் தங்களது பக்க நியாங்களை குறிப்பிடும் வகையில், மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தனர். லக்னோவில் நடைபெற்ற அன்றைய சச்சரவு தொடர்ந்து விவாதங்களை கிளப்பிக்கொண்டே இருக்கிறது.


மேலும் படிக்க | விராட் கோலியிடம் கோபத்தை காட்டிய தோனி... அதுவும் அவர் மொறைச்சா அவ்வளவு தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ