IPL 2023: கோலி கம்பீரிடம் கூறியது என்ன? களத்தில் கூடவே இருந்தவர் சொன்னது இதோ!

Kohli Gambhir Fight: ​விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே நடந்த வாக்குவாதம் குறித்தும், அச்சம்பவம் குறித்தும் களத்தில் வீரர்களுடன் நேரடியாக இருந்த ஒருவர், ஊடகத்திடம் விவரித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2023, 08:23 AM IST
  • லக்னோவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், இச்சம்பவம் நடந்தது.
  • கோலி - கம்பீர் ஆகியோருக்கு போட்டித்தொகையில் 100% அபராதம்.
IPL 2023: கோலி கம்பீரிடம் கூறியது என்ன? களத்தில் கூடவே இருந்தவர் சொன்னது இதோ! title=

Kohli Gambhir Fight: ஐபிஎல் தொடர் என்றாலே, பரபரப்பும் சுவாரஸ்யமும் தான் அதன் தனித்த அடையாளம். கொரோனா தொற்றால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உள்நாட்டிலேயே சில தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்கள், ஓரிரு அணிகளின் ஆதிக்கம் என கடந்த சில தொடர்கள், கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றியிருந்தாலும் இந்தாண்டு தொடர் இதுவரை மிகச்சிறப்பான தொடராக அமைந்துள்ளது. 

உதாரணமாக, புள்ளிப்பட்டியலில் ஒரு அணி 12 புள்ளிகளுடன் ஒரு அணியும், 10 புள்ளிகளுடன் 5 அணிகளும், 8 புள்ளியுடன் ஒரு அணியும் என ஏழு அணிகள் தற்போது தொடரில் முன்னணியில் உள்ளன. முறைய கடைசி மூன்று இடங்களில் உள்ள கொல்கத்த, ஹைதராபாத், டெல்லி அணிகளும் 6 புள்ளிகளுடன் இருக்கிறது. இவையெல்லாம், எந்தெந்த அணிகள் பிளே ஆப் செல்லும் என்பதை மிகவும் கடினமாக்கியுள்ளது. 

இதனால், தொடரில் மோதும் அணிகளுக்கு இடையேயான போட்டித்தன்மையும் அதிமாகியுள்ளது என்றே கூற வேண்டும். ஆனால், இதற்கும் நேற்று முன்தினம் லக்னோ மைதானத்தில் நடந்த கோலி - கம்பீர் ஆகியோருக்கு இடையிலான சர்ச்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனலாம். ஏனென்றால், கோலி - கம்பீர் தற்போதில்லை, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதே ஐபிஎல் தொடரின் போட்டியின்போதும் முட்டிக்கொண்டது அனைவரும் நினைவுவைத்திருப்பார்கள். 

மேலும் படிக்க | விராட் கோலி - கவுதம் கம்பீர் இருவரும் மைதானத்திலேயே மோதிக்கொண்ட சர்ச்சை

தற்போது, கோலி - கம்பீர் ஆகியோரின் போட்டித் தொகையில் இருந்து 100 சதவீதத்தை பிசிசிஐ அபராதமாக விதித்துள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் இடைய நடந்த வாக்குவாதம் குறித்தும், அச்சம்பவம் குறித்தும் களத்தில் வீரர்களுடன் நேரடியாக இருந்த ஒருவர், ஊடகத்திடம் விவரித்துள்ளார். 

அந்த நபர் கூறுகையில்,"நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் கைல் மேயர்ஸ், விராட் கோலியுடன் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தார். அப்போது கோலியிடம் மேயர்ஸ், ஏன் தொடர்ந்து தனது அணியினரை சீண்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு, கோலி,'நீங்கள் ஏன் என்னை பார்த்துக்கொண்டிருந்தீர்கள்' என பதிலளித்துள்ளார். சூழலை புரிந்துகொண்ட கம்பீர், விராட் கோலியுடன் பேச வேண்டாம் என கூறி அங்கிருந்து மேயர்ஸை அழைத்துசெல்ல முயன்றார். அப்போது, விராட் கோலி ஏதோ கருத்து கூற, கம்பீரும் பதிலுக்கு வாக்குவாதத்தில் இறங்க, அது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. 

கையில் மேயர்ஸை அழைத்துச்செல்ல முயன்றுபோது, கோலி - கம்பீர் இடையே நடந்த வார்த்தை யுதம். இதோ:

கம்பீர்: என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்?

கோலி: நான் எதுவும் சொல்லாமல், நீங்கள் ஏன் இடையில் வருகிறீர்கள்?

கம்பீர்: நீங்கள் என் அணி வீரரை முறையற்ற வகையில் (Abuse) நடத்தியுள்ளீர்கள். அது எனது குடும்பத்தை அபூஸ் செய்வது போன்றது.

கோலி: பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

கம்பீர்: ஓ... இனி நான் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா...

இந்த வாக்குவாதங்களுக்கு பின் மைதானதமே பதற்றத்தோடு இருந்ததாகவும் களத்தில் இருந்தவர் கூறினார். இதற்கு முன் போட்டியின்போது, அமித் மிஸ்ரா கோலி குறித்து கள நடுவர்களிடம் புகார் அளித்துள்ளார். அதாவது, 10ஆவது வீரராக களமிறங்கிய நவீனை, விராட் கோலி தொடர்ந்து சீண்டுகிறார் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு பின் விராட், ஆப்கான் வீரர் நவீன் ஆகியோர் தங்களது பக்க நியாங்களை குறிப்பிடும் வகையில், மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தனர். லக்னோவில் நடைபெற்ற அன்றைய சச்சரவு தற்போது கிரிக்கெட் உலகையே பரபரபாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | என்ன சீண்டுனா டபுளா கிடைக்கும் காம்பீர்: விராட் கோலியின் பஞ்ச்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News