ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவை டிஸ்மிஸ் செய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது டெஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணி பேர்ஸ்டோவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. 3வது நடுவரும் ரீப்ளே செய்துவிட்டு அவுட் கொடுத்தார். இது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் இந்த அவுட் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிவிட்டுள்ள டிவிட்டரில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஸ்பிரிட் இந்தியாவிடம் மட்டும் தான் எதிர்பார்ப்பீர்களா? அல்லது உங்களுக்கும் பொருந்துமா? என வினவியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்திய அணியில் விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட் எடுத்திருப்பேன் - பாகிஸ்தான் பந்துவீச்சாளர்


லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்க, ஆஸ்திரேலிய அணி அபாரமாக பந்துவீசிக் கொண்டிருந்தது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் நங்கூரம் போல் நிலைத்து நின்றது மட்டுமல்லாது அதிரடியாக ஆடினார். அவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது. பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருக்கும் வரை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி என்பது எட்டாக்கனி என்ற நிலையே இருந்தது. 


அப்போது கடைசி பேட்ஸ்மேன் என்ற முறையில் பேரிஸ்டோவ் களத்தில் இருந்தார். அவர் ஸ்டோக்ஸூடன் நிலைத்து நின்று ஆடியிருந்தால் நிச்சயமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அவர் ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பிறகு திடீரென கிரீஸை விட்டு வெளியேற, ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பில் வீசி அவுட் கேட்டார். 3வது நடுவரும் பரிசீலித்து அதனை அவுட் கொடுத்தார். இது எல்லோருக்கும் அப்போது அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் அவுட்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணி தோல்வி பாதையில் பயணிக்க தொடங்கி கடைசியாக 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், விமர்சகர்கள் உள்ளிட்டோரை நோக்கி கேள்வி  எழுப்பியுள்ளார். கேம் ஸ்பிரிட்டை எப்போதும் இந்தியாவிடம் மட்டுமே எதிர்பார்ப்பீர்களா அல்லது அது உங்களுக்கும் பொருந்துமா? என்று வினவியுள்ளார். அதாவது வெளிநாட்டு அணிகளிடம் எப்போதும் வசைபாடி வம்பிழுக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த கேள்வி நேரடியாக இருப்பதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் வெளியேற்றம்: ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ