’ரோகித் பெஸ்ட்’ பழைய பகையால் கோலியை சீண்டும் இந்திய முன்னாள் வீரர்!
டெஸ்ட் அணியைவிட, ரோகித் தலைமையிலான இந்திய அணியிடம் நல்ல ஃபர்மாமென்ஸை எதிர்பார்க்கலாம் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
கோலிக்கும், கவுதம் காம்பீருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஆன் பீல்டு, ஆஃப் பீல்டு என எந்த இடமானாலும் இருவருக்கும் துளியும் செட் ஆகாது. இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், களத்திலும், வெளியிலும் முறைத்துக் கொண்டே இருப்பார்கள். ஐ.பி.எல் போட்டிகளில் கூட கொல்கத்தா அணியின் கேப்டனாக கம்பீர் இருந்தபோது, ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய ஒரு போட்டியில் விராட்டுடன் மைதானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கள நடுவர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் சேர்ந்து இருவரையும் அப்போது விலக்கி விட்டனர். அன்றிலிருந்து இன்று வரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் விராட் கோலியை, கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
ALSO READ | ரோகித் கூறிய ஒரு ’பாயிண்ட்’ - கேப்டன்ஷிப்பை இழந்த விராட்
ஐ.பி.எல் போட்டியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களுரு அணி கோப்பையை வெல்லாத காரணத்தால், அந்த அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என கம்பீர் கடந்த சில ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார். மேலும், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் மாற்ற வேண்டும் எனக் கூறி வந்த அவர், ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து இப்போது கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, ரோகித் ஷர்மாவை 50 ஓவர் மற்றும் 20 ஓவர் கேப்டனாக நியமித்தது பிசிசிஐயின் சரியான முடிவு எனத் தெரிவித்துள்ளார். டெஸ்ட் அணியை ஒப்பிடும்போது குறுகிய வடிவிலான இந்திய அணி பாதுகாப்பான ஒரு வீரரின் கையில் இருப்பதாக தெரிவித்துள்ள காம்பீர், இரண்டு கேப்டன்கள் இருப்பது என்பது நல்ல விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | நான் தலைமை பயிற்சியாளராக இருந்ததில் பலருக்கும் அதிருப்தி- ரவி சாஸ்திரி ஓபன் டாக்!
ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எனவும் காம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காம்பீரின் இந்தக் கருத்து விராட் கோலியை சீண்டும் வகையில் இருப்பதால், அவரது ரசிகர்கள் பொங்கியெழுந்துள்ளனர். ஏற்கனவே, ரோகித்ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு கங்குலி தான் காரணம் என பொங்கியெழுந்த விராட் ரசிகர்கள், அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், Wanted ஆக காம்பீர் தெரிவித்துள்ள இந்தக் கருத்து, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் விராட் ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR