வீனஸை வீழ்த்தி கார்பைன் முகுருசா சாம்பியன்!
லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
இறுதிப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த அனுபவ வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்தார். இறுதிப்போட்டியில் 7-5, 6-0 என்ற நேர் செட்டுகளில் வீனஸை ஸ்பெயின் வீராங்கனை முகுருசா வீழத்தினார்.
வீனஸ், ஏற்கனவே 5 முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள நிலையில், நேற்று வெற்றி பெற்றால் அதிக வயதில் ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 23 வயதான முகுருசாவின் ஆக்ரோஷ ஆட்டத்தால் வீனஸை எளிதில் வீழ்த்தினார். முகுருசா முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை பெற்றுள்ளார்.