இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மட்டையாளர் கௌதம் கம்பீர் அனைத்து தரப்பு போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கௌதம் கம்பீர். கடந்த IPL போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறிய இவர் தற்போது அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடைப்பெறுவதாக அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக 11 நிமிட வீடியோ ஒன்றினை தனது முகப்புதக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.



கடந்த ஆண்டு நடைப்பெற்ற IPL தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீரை, டெல்லி அணியும் கைவிட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்திய அணியின் போட்டிகளில் வர்ணனையாளராக பங்குப்பெற்றார்.


இந்நிலையில், இனி மீண்டும் எந்த அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என் என்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் முறையே 4154, 5238 மற்றும் 932 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் IPL போட்டிகளில் கொல்கத்தா அணியை வெற்றிகரமாக வழிநடத்தி இரு முறை கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.


2007ண-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் இவர். இந்நிலையில் இன்று ஓய்வினை அறிவித்திருக்கும் கம்பீரின் இழப்பு இந்திய கிரிகெட் அணிக்கு ஈடுசெய்ய இயலாத ஒன்று.