சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்றார் காம்பீர்

நக்சல் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை தாம் ஏற்பதாக கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் பலியாயினர்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: பலியான அனைத்து வீரரகளின் குழந்தைகளின் முழு கல்விச்செலவை தாம் ஏற்கவுள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைய துவக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.