ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இச்சூழலில் இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார் இதில்  ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்களா ? இல்லை யாராவது ஒருவர் மட்டும்தான் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை. இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது. இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.



இந்நிலையில், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் ஆட வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் சேர்த்து அணியில் ஆடவைக்க முடியாது. அப்படி செய்தால் ஆறாவது பந்துவீச்சாளரை இழக்க நேரிடும். உலக கோப்பை மாதிரியான பெரிய தொடருக்கு ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாமல் போக முடியாது.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஷமி வெளியேற்றம்! இந்த வீரருக்கு வாய்ப்பு?


அப்படி இருவரையும் அணிக்குள் ஆட வைக்க வேண்டுமென்றால் சூர்யகுமார், ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை டிராப் செய்து ரிஷப்பை தொடக்க வீரராக களம் இறக்கலாம். வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்.தினேஷ் கார்த்திக் மேல்வரிசையில் இறங்க விரும்புவதில்லை. ஆனால் எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதி ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. என்னை பொறுத்தமட்டில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்கவேண்டும்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ