ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஷமி வெளியேற்றம்! இந்த வீரருக்கு வாய்ப்பு?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 18, 2022, 08:30 AM IST
  • செப்டம்பர் 20ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
  • ஷமி கோவிட் தொற்று காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  • உமேஷ் யாதவ் மாற்று வீரராக தேர்வு.
ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஷமி வெளியேற்றம்! இந்த வீரருக்கு வாய்ப்பு? title=

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 சர்வதேச தொடரில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால்  ஆஸ்திரேலியாக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.  இதன் காரணமாக செப்டம்பர் 20ம் தேதி நடைபெறும் முதல் டி20க்கான இந்திய அணியுடன் மொஹாலியில் இணையவில்லை.  சனிக்கிழமை (செப்டம்பர் 17) இந்திய அணி மொஹாலியை அடைந்தபோது பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த தகவல் சென்றது. ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவிற்கு வந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.  

தற்போது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று வீரராக பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உமேஷ் சமீபத்தில் மிடில்செக்ஸுடனான கவுண்டி போட்டியில் இருந்து திரும்பினார், மேலும் குவாட் தசை காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார்.  பிசிசிஐயின் மருத்துவக் குழுவுடன் மதிப்பீட்டிற்காக இந்தியாவுக்கு வந்திருந்த உமேஷ், நான்கு நாள் ஆட்டத்திற்கு தேவையான உடல் சக்தி இல்லை என்றும், இதனால் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

மேலும் படிக்க | இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ்தான் காரணம் - புஜாரா

மொஹாலிக்கு பிறகு, செப்டம்பர் 23 ஆம் தேதி நாக்பூரில் இரண்டாவது ஆட்டமும், பிறகு செப்டம்பர் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் மூன்றாவது போட்டியும் நடைபெறுகிறது.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஷமி பங்கேற்பாரா என்பதும் கோவிட் நோய்த்தொற்றில் இருந்து அவர் மீண்டு வருவதைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் செப்டம்பர் 28, அக்டோபர் 2 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் முறையே திருவனந்தபுரம், கவுகாத்தி மற்றும் இந்தூரில் நடைபெறுகின்றன.

umesh

ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு டி20க்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், கோவிட் ஷமிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.  அவர் கடைசியாக 2021 UAE-ல் நடந்த டி20 WC இல் இந்தியாவுக்காக விளையாடினார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரட்டை தொடரில் சிறப்பாக விளையாடினால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்கும்.  

ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் உமேஷ் யாதவ்.

மேலும் படிக்க | ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த சாதனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News