Jasprit Bumrah Baby: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனும் இன்று (செப். 4) ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். இதுகுறித்து பும்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் மகனின் பெயரையும் அந்த சமூக வலைதளப் பக்கத்திலேயே அறிவித்துவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பும்ரா தனது மகன் பிறப்புக்காக இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதனால், நேபாளத்திற்கு எதிரான இந்திய அணியின் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது. பும்ரா தனது மகன் பிறந்ததை அறிவித்த சமூக வலைதளப் பதிவில்,"எங்கள் சிறிய குடும்பம் இப்போது வளர்ந்துள்ளது. நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன. 


அங்கத் ஜஸ்பிரித் பும்ரா


இன்று காலை நாங்கள் எங்கள் குழந்தை அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கும் மேல் இருப்பதாக உணர்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம் உள்பட எதிர்வரும் அனைத்திற்கும் காத்திருக்க முடியவில்லை" ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா ஆகிய இருவரும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.



மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் தவிர மேலும் 2 வீரர்கள் உலக கோப்பை அணியில் இருந்து நீக்கம்!


காதல் டூ குழந்தை வரை


2013ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனில் பும்ராவும், விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனும் முதல் முறையாக சந்தித்தனர். 2019ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இவர்களுக்கு கோவாவில் திருமணம் நடைபெற்றது. 


சஞ்சனா கணேசன் பிரபல கிரிக்கெட் தொகுப்பாளர் மற்றும் முன்னாள் மாடல் அழகி ஆவார். சஞ்சனா எம்டிவி ரியாலிட்டி ஷோவான 'ஸ்பிளிட்ஸ்வில்லா'-வில் பங்கேற்றவர். அவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2012இல் ஃபெமினா ஸ்டைல் திவா போட்டியில் பங்கேற்றார். அவர் 'ஃபெமினா அதிகாரப்பூர்வ அழகி' பட்டத்தை வென்றார்.


பாகிஸ்தான் போட்டி


ஆசிய கோப்பை தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் தான் விளையாட உள்ளது. கடந்த சனிக்கிழமை (செப். 2) பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் போட்டி மழையால் முடிவில்லாமல் ரத்தானது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 266 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 87 ரன்களையும், இஷான் கிஷான் 82 ரன்களையும் எடுத்தாலும் இந்தியாவின் டாப்-ஆர்டர் மிகவும் கவலைக்கொள்ளும் வகையில் இருந்தது. 


பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ராஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும், இந்திய அணி ஒரு பந்து கூட வீசாத நிலையில், போட்டி மழையால் ரத்தானது. எனவே, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்திய அணி இன்று குரூப் சுற்றின் கடைசி போட்டியில் நேபாளம் அணியுடன் விளையாட உள்ளது. 


எனவே, சூப்பர்-4 சுற்றில் இந்திய அணியுடன் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சூப்பர்-4 சுற்றுக்கு இந்திய அணி தேர்வாகும்பட்சத்தில் மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் வாய்ப்புள்ளது என்பது நினைவுக்கூரத்தக்கது.


ஏற்கெனவே, பும்ரா சுமார் 11 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் திரும்பினார். அந்த தொடருக்கு கேப்டனாக செயல்பட்ட பும்ரா, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றார். பும்ரா 73 ஒருநாள் போட்டிகளில் 24.3 சராசரியுடன் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் அணி இந்த நாட்டுடன் இதுவரை விளையாடியது இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ