முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், தனது ராஜ்யசபா சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக பங்களிப்பதாக தெரிவித்துள்ளார்.  "ராஜ்யசபா உறுப்பினராக, விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக எனது ராஜ்யசபா சம்பளத்தை வழங்க விரும்புகிறேன்.  நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் இணைந்துள்ளேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்," என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | கோலியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்!


 


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நேர்மையாக நிறைவேற்றும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் விளையாட்டை ஊக்குவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜ்யசபா தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி ஐந்து வேட்பாளர்களை பரிந்துரைத்தது. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. 



1998 முதல் 2016ம் ஆண்டு வரை ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக விளையாடினார்.  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க சீசனில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்காக விளையாடினார். ஹர்பஜன் சிங் இதுவரை விளையாடியுள்ள 160 போட்டிகளில், ஓவருக்கு 7.05 ரன்கள் விட்டுக்கொடுத்து 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு புள்ளிகள் 18 க்கு 5 ஆகும். பேட்டிங்கில், 137.22 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 829 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் அவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 64 ஆகும். ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2017 வரை மும்பை இந்தியன்ஸில் இருந்தார். ஐபிஎல் 2018 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அவரை ரூ. 2 கோடிக்கு அடிப்படை விலையில் வாங்கியது.



மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR