துபாய்: இந்திய அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் மற்றும் முகமது அமிர் இடையேயான சண்டை எல்லா எல்லைகளையும் தாண்டியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது, அதன் பிறகு பாகிஸ்தான் வீரர்களின் ஆணவம் வானத்தின் உச்சியில் உள்ளது. இந்திய அணிக்கும் அதன் வீரர்களுக்கும் எதிராக பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹர்பஜனுக்கும் அமீருக்கும் இடையே கடும் வாக்குவாதம்
இந்த விவகாரம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பழைய டெஸ்ட் போட்டியின் காணொளியை அவர் யூடியூப்பில் பகிர்ந்த ட்வீட்டுடன் இந்த விவாதம் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) வீசிய 4 பந்துகளில் ஷாகித் அப்ரிடி 4 சிக்ஸர்களை விளாசுகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த அமீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இது எப்படி நடக்கும் என்று கேலி செய்தார். இந்த நக்கலான ட்வீட்டுக்கு பிறகு ஹர்பஜன் சிங்கும் முகமது அமிருக்கு தகுந்த பதிலடி கொடுத்து ஸ்பாட் பிக்சிங் ஊழலை நினைவுபடுத்தினார். பிக்சிங் செய்ததற்காக அமீர் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ தோனியை ஆலோசகராக நியமிக்கபட்டதற்கான பின்னணி!


 



 



 



 



 



 


எல்லை மீறி சென்ற வாக்குவாதம்
அமீர் ட்வீட்டிற்குப் பிறகு, ஹர்பஜன் சிங் பொருத்தமான பதிலைக் கொடுத்து, 'லார்ட்ஸில் நோ பால் எப்படி நடந்தது? எவ்வளவு எடுக்கப்பட்டது, யார் கொடுத்தது? டெஸ்ட் கிரிக்கெட் என்பது No Ball எப்படி இருக்கும்? உங்களுக்கும் உங்கள் மற்ற தோழர்களுக்கும் அவமானம், இந்த அழகான ஆடட்தை கொச்சைப்படுத்தி விட்டீர்கள்.


ஹர்பஜன் சிங் தக்க பதிலடி
இதற்கு பிறகு ஹர்பஜன் சிங், ஆசிய கோப்பை போட்டியில் முகமது அமிரின் பந்தில் சிக்ஸர் அடிக்கும் பழைய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஹர்பஜன் சிங், சராமரியாக தாக்கி தக்க பதில் அளித்து உள்ளார். அதற்கு அமீர் மீண்டும் ட்வீட் முலம் விவாதத்தை வைத்தார்.


ALSO READ பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR