தோனியை ஆலோசகராக நியமிக்கபட்டதற்கான பின்னணி!

உலக கோப்பை டி20 2021 போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது  

Written by - Rajadurai Kannan | Last Updated : Oct 24, 2021, 06:16 PM IST
  • தனது யுத்திகளாலும், மின்னல் வேக ஸ்டம்பிங்கினாலும் பல விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
  • இந்த உலக கோப்பை முடிந்த பின்பு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கோலி.
தோனியை ஆலோசகராக நியமிக்கபட்டதற்கான பின்னணி!

மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் மகேந்திர சிங் தோனி. 2021 உலக கோப்பை டி20 போட்டியில் தனது திறமையின் மூலம் மீண்டும் கோப்பையை வெல்ல, இந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

ஒரு நாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பல சாதனைகளுக்கு தோனியும் பல சந்தர்ப்பங்களில் ஒரு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.  தனது யுத்திகளாலும், மின்னல் வேக ஸ்டம்பிங்கினாலும் பல விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.  இந்தியா மட்டும் இன்றி உலகில் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் தோனி, பல இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். 

ALSO READ INDvsPAK ஆட்டைக்கு ரெடியா! வெற்றி பெற இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம்?

பல சூழ்நிலைகளில் வீரர்களின் மீது கோபம் கொண்டாலும் தோனி இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீர்ரகள் அனைவருக்கும் ஒரு சகோதரராகவே திகழ்கிறார்.  அணி இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுதெல்லாம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.  இந்திய அணிக்கு வரும் ஒவ்வொரு இளம் வீரரும் தோனியிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.  சிஎஸ்கே அணி விளையாடும் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பும், எதிரணியில் உள்ள வீரர்கள் தோனியிடம் பேசி ஆலோசனை கேட்டு செல்வர்.

dhoni

தோனி ஓய்வு பெற்றதிலிருந்து, யாதவ் மற்றும் சாஹல் விக்கெட்களை எடுக்க தினறி வருகின்றனர்.  கோலி, ரோஹித் போன்ற சீனியர் வீரர்கள் இருந்தும் தோனியின் அளவிற்கு ஸ்பின்னர்களை அவர்களால் வழிகாட்ட முடியவில்லை.  பேட்ஸ்மேன்களின் மனதை மட்டுமின்றி, பந்து வீச்சாளர்களின் மனதையும் சரியாக கனிப்பார் தோனி.  பல சமயங்களில் தோனியின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துகள் இந்திய அணிக்கு வெற்றியாக அமைந்துள்ளது.  தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், கோலி பல சமயங்களில் தோனியின் அறிவுரையை ஏற்று நடப்பார்.  

இந்த தலைமுறையின் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவராக கோலி இருந்த போதிலும், அவரால் இன்னும் ஒரு ஐசிசி கோப்பையை கூட கேப்டனாக வெல்ல முடியவில்லை.  இந்த உலக கோப்பை முடிந்த பின்பு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கோலி.  எனவே, டீம் இந்தியா இந்த முறை கோப்பையை வெல்ல தோனியை ஆலோசகராக நியமிக்க கோலி பரிந்துரை செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. 

dhoni  

தோனி இந்திய பிளேயிங் 11ல் இடம்பெறா விட்டாலும், வீரர்களுடன் தோனி இருப்பது மிகப்பெரிய பலமாகவே உள்ளது.  இஷான் கிஷன், ராகுல் சஹார் மற்றும் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களுக்கு தோனியின் ஆலோசனை உறுதுணையாக இருக்கும்.  மூன்று ஐசிசி கோப்பைகளும் வென்ற தோனி யாரும் சிந்திக்க முடியாத பல வெற்றிகளை இந்திய அணிக்கு கொடுத்துள்ளார்.  அதிகார்வப்பூர்வமாக இல்லை என்றாலும், இந்திய அணியின் ஓவ்வொரு வீரருக்கும் ஆலோசகராகவே தோனி உள்ளார்.  

வீரர்களுடன் தோனி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு கோப்பை வெல்ல கடும் முயற்சி செய்கின்றனர் என்றே தோன்றுகிறது.  2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் T20 உலகக் கோப்பையில்  இளம் இந்திய அணியை வைத்து கோப்பையை கைப்பற்றினார் தோனி.  14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இதனை ஒரு ஆலோசகராக இருந்து வெற்றிக்கு அழைத்து செல்லவுள்ளார் எம்எஸ். தோனி.

ALSO READ 11 ஆல்ரவுண்டர்கள் இருந்தும் பரிதாப நிலையில் மேற்கிந்திய தீவுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News