இந்திய அணி மீது கடும் விமர்சனம் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அணியில் இருந்து 2 வீரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. முக்கியமான அப்போடியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சொதப்பலான ஆட்டத்தால் மிக குறைவான இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. 


பீல்டிங்கில் கடும் சொதப்பல் 


பந்துவீச்சாளர்கள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டபோதும், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முக்கியமான கேட்சுகளையும் ரன்அவுட்டுகளையும் மிஸ் செய்தது ஆட்டத்தின் போக்கையே முழுமையாக திசைமாற்றியது. குறிப்பாக மார்க்ரம் கேட்ச் மற்றும் ரன்அவுட்டுகள் மிஸ்ஸானது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.


மேலும் படிக்க | ICC T20 World cup : ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பிக்கும் இங்கிலாந்து... அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?


அரையிறுதி வாய்ப்பு


இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளை இந்திய அணி வீழ்த்தினால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அரையிறுதிக்கு சென்றுவிடலாம். இல்லையென்றால், தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கூட இருக்கிறது. 


ஹர்பஜன் சிங் ஆலோசனை


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்திய அணியில் உடனடியாக இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். பார்ம் இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை அணியில் இருந்து நீக்கிவிட்டு உடனடியாக ரிஷப் பன்ட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரை அணியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | Video : செம! மேகத்திற்கு மேலே... கிரிக்கெட் பார்க்க சூப்பரான லோகேஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ