ICC T20 World cup : ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பிக்கும் இங்கிலாந்து... அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து தக்கவைத்துள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Nov 1, 2022, 06:33 PM IST
  • ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளது.
  • முதல் பிரிவில் அனைத்து அணிகளுக்கும் தலா 1 போட்டி பாக்கி உள்ளது.
ICC T20 World cup : ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பிக்கும் இங்கிலாந்து... அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?  title=

ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க அரையிறுதியில் யார் யார் எந்தெந்த நிலையில் செல்லப்போகிறார்கள் என்ற பரபரப்பும் நிலவுகிறது. 

அந்த வகையில், பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி இந்த தொடரில் தோல்வியையே பார்க்காமல் இருந்த நிலையில், இந்த போட்டியை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து இருந்தது. 

இதனால், டாஸ் வென்ற உடன் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர், அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 73 ரன்களை குவித்தார். அவருடன் களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் 52 ரன்களை எடுக்க இங்கிலாந்து 180 ரன்களை நியூசிலாந்திற்கு இலக்காக நிர்ணயித்தது. 

மேலும் படிக்க | இந்திய அணிக்கு மீண்டும் சறுக்கல்! உலகக்கோப்பையில் முக்கிய வீரர் காயம்!

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓப்பனர்கள் ஃபின் ஆலன், டேவான் கான்வே ஆகியோர் சொதப்பினர். இருப்பினும், கேப்டன் வில்லியம்சன் 40 ரன்கள், கிளென் பிலிப்ஸ் 62 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். 

அதில் கடைசி கட்டத்தில் ஆட்டத்தை பினிஷ் செய்ய வீரர்கள் இல்லாத காரணத்தால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டும் நியூசிலாந்தால் எடுக்க முடிந்தது. இதன்மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இதன்மூலம், முதல் சுற்றின் புள்ளிப்பட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளன. இம்மூன்று அணிகளும் 5 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் அந்தந்த இடத்தை பிடித்துள்ளன. 

முதல் பிரிவில் அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளை விளையாடிவிட்ட நிலையில், இன்னும் 1 போட்டி மட்டுமே பாக்கியிருக்கிறது. அதில், வரும் நவ. 4ஆம் தேதி நியூசிலாந்து, அயர்லாந்தையும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானையும் சந்திக்க உள்ளன. தொடர்ந்து, அடுத்த நாளான நவ. 5இல், இங்கிலாந்து - இலங்கை உடன் மோதுகிறது. 

ஒருவேளை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகியவை அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால், ரன்ரேட் அதிகமுள்ள அணி அரையிறுதிக்குச் செல்லும். மாறாக, மூன்றில் ஏதேனும் ஒரு அணி மட்டும் தோல்வியுற்று இரண்டு அணிகள் வென்றால், அந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு போகும். 

மேலும், இலங்கை, இங்கிலாந்து உடனான போட்டியில் வென்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ஏதேனும் ஒரு அணியும் தோற்றால், இலங்கை அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது என்பதால், அனைத்து போட்டிகளும் சூடுபறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அணியில் இடம் கிடைக்காததால் விரக்தியில் இந்திய வீரர் செய்த செயல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News