நைட் மட்டும் தான் கொரோனா பாயுமா... பகலில் பதுங்கிடுமா. இரவு ஊரடங்கை கலாய்த்த ஹர்பஜன் சிங்
இந்த கொரோனா வைரஸ் இரவு நேரத்தில் மட்டுமே தான் வரும்... பகல் நேரத்தில் வராது... இது ஒரு நல்ல முடிவு என இரவு ஊரடங்கை கலாய்க்கும் விதாமாக பதிவிட்டுள்ளார்.
Night Curfew in Delhi: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு விதி போடப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து, தேர்தலுக்கு பிறகு, தமிழகத்திலும் ஊரடங்கு போடப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தரப்பில், தமிழகத்தில் ஊரடங்குக்கு (No Lockdown) வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது.
அதேபோல தேசிய தலைநகர் டெல்லியின் நிலைமையும் மிகவும் மோசமடைந்துக் கொண்டே வருகிறது. கொரோனா (Corona Guidelines) நெறிமுறையை முழுமையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களை டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இன்னும் பலர் விதிகளை சரியாக பின்பற்றவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், மகாராஷ்டிராவுக்குப் பிறகு, இப்போது டெல்லி அரசாங்கமும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இன்று முதல் டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு:
தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் (Delhi) இரவு ஊரடங்கு உத்தரவு (Night curfew) விதிக்க டெல்லி அரசு (Delhi Government) முடிவு செய்துள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் பொருந்தும். ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். இந்த உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | இன்று முதல் டெல்லியில் இரவு ஊரடங்கு, பொதுமக்கள் இதைச் செய்யாதீங்க!
மகாராஷ்டிரா முழுவதும் இரவு ஊரடங்கு:
தினசரி அதிகரித்து வரும் புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புக்களை மகாராஷ்டிரா அரசு (Maharashtra Govt) தொடர்ந்து கண்காணித்து வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு திங்களன்று புதிய அத்தியாவசிய சேவைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் பகல் நேரங்களில் வெளியே வர தடை உத்தரவு உள்ளிட்ட கடுமையான தடைகள் நேற்று முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைக்கு வந்தன. ஏப்ரல் 30 வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. .
ஒருபக்கம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இரவு ஊரடங்கு (Night Curfew) போடுவதில் மட்டும் அரசுகள் கவனம் செலுத்துகிறது, பகலில் ஊரடங்கு போடுவதில் ஏன் அரசுக்கு தயக்கம் என்ற ரீதியில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), தனது ட்விட்டர் பக்கத்தில், "இரவு ஊரடங்கு" பற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ALSO READ | கவனம்! இந்த இரண்டு மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம்! அரசாங்கம் திணறல்!
இந்த கொரோனா வைரஸ் இரவு நேரத்தில் மட்டுமே தான் வரும்... பகல் நேரத்தில் வராது... இது ஒரு நல்ல முடிவு என இரவு ஊரடங்கை கலாய்க்கும் விதாமாக பதிவிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா அதிகரித்தும் வரும் நிலையில், வரும் 8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி தொடர்பான பிரச்சினைகளை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார்.
ALSO READ | 8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR