ஹர்பஜன் செய்த சம்பவம்.. மூக்குடைந்த லெஹ்மன், சிரித்த வார்னே..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், வார்த்தைபோரில் ஈடுபட்ட டேரன் லெஹ்மனை ஒரே வார்தையில் மூக்குடைத்த ருசிகர சம்பவத்தை ஹர்பஜன் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் சாம்பியன் பவுலராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், ஆக்ரோஷமாகவும் விளையாடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுவது என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கை அதிக முறை அவுட்டாகியவர் இவரே. பந்துவீச்சில் துல்லியமாக இருக்கும் ஹர்பஜன், வார்த்தை விளையாட்டுகளில் யாரேனும் சீண்டிவிட்டால் தக்க பதிலடி கொடுக்க தயங்கவே மாட்டார்.
ALSO READ | SA Tour: இந்திய அணியில் கேள்விக்குறியாகும் 2 பேரின் இடம்!
குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் செய்த சம்பங்கள் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சைமன்ஸூடன் நடந்த வார்த்தைபோர், கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய விவகாரமாக உருவெடுத்தது. இதேபோல் நடைபெற்ற ஒருசம்பவத்தை ஹர்பஜன் அண்மையில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு போட்டியில், அந்த அணி வீரர்கள் தொடர்ந்து வார்த்தைகளை விட்டு சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
பொறுத்துப் பார்த்த ஹர்பஜன், அவர்களைவிட இருமடங்கு கொடுத்தால் மட்டுமே அமைதியாக இருப்பார்கள் என நினைத்து, அந்த தருணத்திற்காக காத்திருந்துள்ளார். அந்தநேரத்தில் மெக்ராத் மற்றும் லெஹ்மன் இருவரும் ஹர்பஜனை சீண்டியுள்ளனர். கடுப்பான ஹர்பஜன், லெஹ்மனைப் பார்த்து ‘நீங்கள் என்ன கர்ப்பமாக இருக்கிறீர்களா?’ எனக் கேட்டுள்ளார். அவரின் இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத லெஹ்மேன் மூக்குடைந்து, வார்னேவிடம் சென்று இதனைக் கூறியுள்ளார். ஹர்பஜன் கூறியதைக் கேட்ட வார்னே வாய்விட்டு சிரித்துள்ளார்.
மேலும், எதற்காக இப்படி கமெண்ட் செய்தீர்கள் என வார்னே, ஹர்பஜனிடமும் கேட்டுள்ளார். விளையாட்டு வீரர் பிட்டாக இருக்க வேண்டும், ஆனால் லெஹ்மன் தொப்பை வைத்துக் கொண்டிருந்ததால் அப்படி கேட்டேன் என ஜாலியாக தெரிவித்துள்ளார், இந்த விளக்கத்தைக் கேட்ட வார்னேவும், லெஹ்மனிடம் இதைக் கூறி மீண்டும் சிரித்தாராம்.
ALSO READ | இந்தியாவில் 10 விக்கெட் எடுத்தா என்ன? அஜாஸ் படேலை நீக்கிய நியூசிலாந்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR