இந்தியாவில் 10 விக்கெட் எடுத்தா என்ன? அஜாஸ் படேலை நீக்கிய நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேலை வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து நீக்கியுள்ளது. ஏன் தெரியுமா?

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 24, 2021, 04:14 PM IST
இந்தியாவில் 10 விக்கெட் எடுத்தா என்ன? அஜாஸ் படேலை நீக்கிய நியூசிலாந்து  title=

20 ஓவர் உலகக்கோப்பையை முடித்த கையோடு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்தது. முதலில் ரோகித் ஷர்மா தலைமையிலான 20 ஓவர் தொடரில் பங்கேற்ற அந்த அணி, 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் ஷர்மாவும், தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டதற்கு பிறகு நடைபெற்ற முதல் 20 ஓவர் தொடர் இது. இந்த தொடர் இருவருக்கும் வெற்றிகரமான தொடராக அமைந்தது. இந்த தொடரில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, டிம்சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

ALSO READ | Harbhajan: ஓய்வு முடிவை அறிவித்த ’பஞ்சாப் கிங்’

20 ஓவர் தொடரைத் தொடர்ந்து விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து எதிர்கொண்டது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி, மற்றொரு போட்டியில் தட்டுத்தடுமாறி டிரா செய்தது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த அஜாஸ் படேல், வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அதாவது, ஒரே இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

இந்தியாவில் இந்த சாதனையை நிகழ்த்தியதால், அடுத்தடுத்த தொடர்களில் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக கிடைக்கும் என கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்து இருந்த நிலையில், நியூசிலாந்து அணி எடுத்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜாஸ் படேலுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. வேகப்பந்துவீச்சுக்கு அணுகூலமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால், ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டும் இருந்தால் போதும் என நியூசிலாந்து நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அஜாஸ் படேல் நீக்கப்பட்டுள்ளார்.

ALSO READ | விராட் கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கங்குலி மீது பாய்ச்சல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News