திலக் வர்மா அரைசதம் அடிக்கவிடாமல் செய்த ஹர்திக் பாண்டியா - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் அரைசதம் அடிக்க திலக் வர்மாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருந்தபோதும் சிக்சர் அடித்து ஹர்திக் பாண்டியா வெற்றி ரன்களை எடுத்ததை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 3வது போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லாமல் இருந்திருந்தால் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியிருக்கும். நல்ல வேளையாக சிறப்பாக ஆடி இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றியை பெற்றது. இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
3வது 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 42 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதிரடி காட்டிய ரோமன் பவல் 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இவரின் அதிரடியால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி கவுரமான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.
இந்திய அணி தொக்கம் ஏமாற்றம்
வென்றே ஆக வேண்டிய இப்போட்டியில் இந்திய அணியில் சுப்மான் கில் மற்றும் ஜெய்ஷவால் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான ஜெய்ஷ்வால் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்திருந்தார். ஆனால், இந்த போட்டி அவருக்கானதாக இருக்கவில்லை. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 1 (2), ஷுப்மன் கில் 6 (11) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
சூர்யகுமார் யாதவ் அபார ஆட்டம்
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 83 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய திலக் வர்மா 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஹார்திக் பாண்டியா 20 (15) ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 17.5 ஓவர்கள் முடிவிலேயே 164/3 ரன்களை குவித்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹார்திக் மீது விமர்சனம்:
இப்போட்டியில், இந்திய அணி வெற்றிபெற கடைசி 18 பந்துகளில் 6 ரன்கள் மட்டும்தான் தேவைப்பட்டது. அப்போது, திலக் வர்மா 47 (35) ரன்களை எடுத்திருந்தார். அவர் அரை சதம் அடிக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், ஹார்திக் பாண்டியா ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யாமல், சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதனால், திலக் வர்மாவால் அரை சதம் எடுக்க முடியவில்லை. இதனால், ஹார்திக் பாண்டியாவை சுயநலம் பிடித்தவர் என கடுமையாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க | தோனி vs கோலி vs சச்சின்: மூவரில் யாரிடம் அதிக சொத்துக்கள் உள்ளது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ