மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.


பாண்டியா சிறப்பு பூஜை


இந்தப் போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் ஜாலியாக இருக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலம் வெராவல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | தோனி வந்தும் எந்த பயனும் இல்லை... சிஎஸ்கே பேட்டர்கள் தடுமாறியதற்கு என்ன காரணம்?


ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம்


அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா சிவனுக்கு தந்து கையால் அபிஷேகம் செய்தும் தீபாராதனை காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாக நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு வகையிலான சர்ச்சைகள் நீடித்து வருகிறது. மேலும், பயிற்சியாளர்கள் உடன் ஹர்திக் பாண்டியா கருத்து வேறுபாடு மற்றும் ரோகித் சர்மாவை பீல்டிங்கின் போது அலைக்கழிக்கப்பட்ட வீடியோ வெளியானது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம் எழுந்தது.


மும்பை இந்தியன்ஸ் அணி கெடு


இன்னும் ஓரிரு போட்டிகள் வரையில் ஹர்திக் பாண்டியாவிற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அவர் வெற்றி பெறவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மீண்டும் ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க மாட்டேன் என ரோகித் சர்மா தெரிவித்துவிட்டாராம். மேலும், அடுத்த ஐபிஎல் சீசன் மும்பை அணிக்காக விளையாட மாட்டேன் என்றும் தெரிவித்துவிட்டாராம். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அதிருப்தியில் இருக்கிறது.


மேலும் படிக்க | குஜராத்துக்கு ஷாக் கொடுத்த ஷஷாங்க் சிங்... ஏலத்தில் பஞ்சாப் எடுத்த தவறான வீரர் - ஞாபகம் இருக்கா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ