ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 130 ரன்களுக்கு சுருட்டியது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஜொலித்தார். அவருடைய பந்துவீச்சில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜாஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜோஸ் பட்லர்


ஹெட்மயர் பாண்டியாவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, பாண்டியா உற்சாகத்தில் பந்தை தூக்கியெறியும்போது, அம்பயர்கள் மீது படும் வகையில் சென்றது. இதனைப் பார்த்த அம்பயர் ஒதுங்கி ஓடினார். இதனைக் கவனித்துக் கொண்ட பாண்டியா, தவறை உணர்ந்து அம்பயரிடம் சென்று கிச்சு கிச்சு மூட்டி விளையாடினார். பாண்டியாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 



இறுதிப்போட்டியில் பாண்டியா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ராஜஸ்தான் அணியை குறைவான ஸ்கோரில் கட்டுப்படுத்தியதற்கு இவருடைய பந்துவீச்சே முக்கிய காரணமாகவும் அமைந்தது. பேட்டிங்கிலும் சிறப்பாக விளயாடினார். 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணி சேஸிங்கில்லும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்தார். 



ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் அணியும், 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணியும் மோதியால் ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் இப்போட்டியை கண்டுகளித்தனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்த குஜராத் அணி, முதல் ஐபிஎல் தொடரிலேயே முதன்முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 


மேலும் படிக்க | ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR