சனிக்கிழமை நடைபெற்ற பைனல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் சாம்பியன் பட்டம் வெல்ல 217 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய இந்தியா 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிரடியாக ஆடிய இந்திய வீரர் மஞ்சோத் கல்ரா 102 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஹார்விக் தேசாய் 61 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர்.


கமலேஷ் நாகர்கோடி தந்து முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு ஒரு விக்கெட்டை பெற்று தந்தார். அவரது பந்து ஆஸ்திரேலியா கேப்டன் ஜேசன் சங்கம் 
மட்டையின் விளிம்பில் பட்டு பின்னோக்கி சென்றது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஹார்விக் தேசாய் தனது வலது பக்கத்தில் வந்த பந்தை ஜம்ப் அடுத்து கேட்ச் பிடித்தார். காற்றில் பறந்து பிடித்த இந்த கேட்ச் அனைவரையும் கவர்ந்தது. இது இந்தியாவுக்கு மிக முக்கியமான விக்கெட் ஆகும்.


வீடியோ: